/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி
/
உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி
ADDED : ஏப் 16, 2025 01:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:தமிழகம் முழுதும் ஆண்டுதோறும் ஏப். 14 முதல் 20 வரை, தீ தொண்டு வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, உத்திரமேரூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில், அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. உதவி மாவட்ட அலுவலர் பாஸ்கரன் பங்கேற்று, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதில், உத்திரமேரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெகதீசன், நிலைய எழுத்தர் ஜீவா மற்றும் தீயணைப்பு வீரர்கள் பலர் பங்கேற்றனர்.

