/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உறுப்பு தானம் வழங்கியவர் உடலுக்கு அஞ்சலி
/
உறுப்பு தானம் வழங்கியவர் உடலுக்கு அஞ்சலி
ADDED : செப் 21, 2025 10:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:உடல் உறுப்பு தானம் வழங்கியவரின், உடலுக்கு வருவாய் துறையினர் அஞ்சலி செலுத்தினர்.
சின்ன காஞ்சிபுரம், தங்கவேலர் தெருவைச் சேர்ந்தவர் சுப்ரமணி மகன் பாலாஜி, 47; மூளைச்சாவால் உயிரிழந்தார்.
இவரது உடல் உறுப்புகளை அவரது குடும்பத்தினர் அரசிற்கு தானமாக வழங்கி உள்ளனர்.
இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பாக, காஞ்சிபுரம் தாசில்தார் ரபிக், காஞ்சிபுரம் தி.மு .க., - எம்.எல்.ஏ., எழிலரசன் ஆகியோர் பாலாஜி உடலுக்கு மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினர்.