/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது
/
வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது
ADDED : டிச 03, 2024 04:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஓரிக்கை, கோல்டன் நகரைச் சேர்ந்தவர் நவீன், 25. இரு நாட்களுக்கு முன்,இருசக்கர வாகனத்தில், ஓரிக்கை பேருந்து டிப்போ அருகே சென்றார்.
அங்கு, அவரை மடக்கிய இருவர் கத்தியை காட்டி, அவரிடம் இருந்த, 2,100 ரூபாயை பறித்து சென்றனர். இதுகுறித்து, வழக்கு பதிந்த காஞ்சி தாலுகா போலீசார் மர்ம நபரை தேடி வந்தனர்.
'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஓரிக்கை மாரியம்மன் கோவிலை சேர்ந்த முருகானந்தம், 24, செவிலிமேடைச் சேர்ந்த மணிபாரதி, 23, ஆகிய இருவரும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.