ADDED : நவ 02, 2024 08:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் போலீசார், ஸ்ரீபெரும்புதுார் அருகே ராமாபுரம் கிராமத்தில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, மாந்தோப்பு அருகே ஸ்ரீபெரும்புதுார் டி.எம்.ஏ., தெருவை சேர்ந்த விஷ்னு, 26. பாடிசேரி கிராமத்தை சேர்ந்த சூர்யா, 24, ஆகிய இருவர் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்தனர். அவர்களிடம் சோதனை நடத்தியத்தில், 1.300 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது.
இதையடுத்து,இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.