ADDED : அக் 15, 2024 08:35 PM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, கீவளூர் கிராமத்தில் உள்ள பெட்டி கடையில், ஸ்ரீபெரும்புதுார் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில், அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூலிப் உள்ளிட்ட குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக விற்பனைக்காக வைத்திருந்தது தெரிந்தது.
இதையடுத்து, 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 100 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, கடையின் உரிமையாளர் மணிகண்டன், 40, என்பரை கைது செய்தனர்.
அதே போல, கீவளூர் அம்பேத்கர் பெரிய தெருவைச் சேர்ந்த ரமேஷ், 30, என்பவரின் பெட்டிக்கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 15 கிலோ குடகாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, இருவரையும் ஸ்ரீபெரும்புதுார் போலீசார் கைது செய்தனர். இரண்டு நாட்களாக போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், ஸ்ரீபெரும்புதுார் சுற்றுவட்டார பகுதிகளில் 250 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.