/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குட்கா விற்ற இருவர் கைது 150 கிலோ பறிமுதல்
/
குட்கா விற்ற இருவர் கைது 150 கிலோ பறிமுதல்
ADDED : ஜூலை 11, 2025 09:34 PM
ஸ்ரீபெரும்புதுார்:சுங்குவார்சத்திரம் அருகே, குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, சுங்குவார்சத்திரம் அருகே உள்ள கூத்தவாக்கம் கிராமத்தில், குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக, சுங்குவார்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, கூத்தவாக்கம் பெருமாள் கோவில் தெருவில் உள்ள பெட்டி கடையில், போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அதில், ஹான்ஸ், கூல்லிப், விமல் உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.
அதேபோல், கூத்தவாக்கம் பஜனை கோவில் தெருவில் உள்ள பெட்டி கடையில் நடத்திய சோதனையில் குட்கா பொருட்கள் சிக்கின.
மொத்தம், 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 150 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கடையின் உரிமையாளர்களான முருகன், 47 மற்றும் முத்துலிங்கம், 42 இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

