ADDED : ஜன 01, 2025 07:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பொய்யாக்குளம் உள்ளிட்ட பகுதிகளில், லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக, விஷ்ணுகாஞ்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக, பொய்யாக்குளம் பகுதியைச் சேர்ந்த அருள்மணி, 60, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியைச் சேர்ந்த லோகநாதன், 55, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து லாட்டரி, மொபைல்போன், இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.
அதேபோல், வாலாஜாபாத் தாலுகாவிற்குட்பட்ட ரெட்டேரி பிள்ளையார் கோவில் அருகே, கஞ்சா விற்பனை செய்ததாக, களக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சத்தியராஜ், 21, என்ற வாலிபரை மாகரல் போலீசார் கைது செய்தனர்.

