/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'யு டியூப்'பில் பயிற்சி பெற்று செயின் பறித்த இருவர் கைது
/
'யு டியூப்'பில் பயிற்சி பெற்று செயின் பறித்த இருவர் கைது
'யு டியூப்'பில் பயிற்சி பெற்று செயின் பறித்த இருவர் கைது
'யு டியூப்'பில் பயிற்சி பெற்று செயின் பறித்த இருவர் கைது
ADDED : டிச 05, 2024 01:58 AM

சென்னை, 'யு டியூப்'பில் வீடியோக்களை பார்த்து, மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள் இருவரை, போலீசார் கைது செய்தனர்.
மயிலாப்பூர், வி.எஸ்.வி., கோவில் தெருவைச் சேர்ந்தவர் சகுந்தலா, 64. கடந்த 30ம் தேதி, மருந்தகத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவர் அணிந்து இருந்த, 3 சவரன் செயினை பறித்து தப்பினர். கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, மயிலாப்பூர்போலீசார் விசாரித்தனர்.
இதில், மதுரையைச் சேர்ந்த முகமது ஷேக்சிக்கந்தர், 24, திண்டுக்கல்லைச் சேர்ந்த பர்வேஸ் முஷ்ரப், 23, ஆகியோர்செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.
போலீசார் அவர்களை கைது செய்தனர். விசாரணையில், 'யு டியூப்'பில் வீடியோக்களை பார்த்து, முதல் முதலாக செயின் பறிப்பில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
அவர்களிடம் இருந்து, 19 கிராம் தங்க நகை,இருசக்கர வாகனமும்பறிமுதல் செய்யப்பட்டன.