/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இரும்பு கம்பி திருடிய இருவருக்கு வலை
/
இரும்பு கம்பி திருடிய இருவருக்கு வலை
ADDED : ஏப் 22, 2025 11:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்:மாங்காடு, ஜனனி நகரில் சிறிய அளவில் லேத் கம்பெனி இயங்குகிறது. இங்கு வைத்திருந்த இரும்பு கம்பிகள் அடிக்கடி மாயமானதையடுத்து, காண்காணிப்பு கேமராக்களை நிர்வாகத்தினர் ஆய்வு செய்தனர்.
அதில், இரண்டு இளைஞர்கள் மதில் சுவர் ஏறிக் குதித்து, இரும்பு கம்பிகளை பைக்கில் வைத்து திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் கம்பிகளை திருடி சென்ற இளைஞர்களை தேடி வருகின்றனர்.

