ADDED : ஜூலை 11, 2025 09:33 PM
ஸ்ரீபெரும்புதுார்:சுங்குவார்சத்திரம் அருகே லாரி மோதி பைக்கில் சென்ற இருவர் உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சக்திவேல், 45, கொத்தனார். சுங்குவார்சத்திரத்தில் தங்கி, தொழிற்சாலை ஒன்றில் கட்டட வேலை பார்த்து வந்தார்.
நேற்று மதியம் உடன் வேலை செய்யும் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருடன், 'ஹோண்டா ஆக்டிவா' இருசக்கர வாகனத்தில், ஸ்ரீபெரும்புதுார் நோக்கி சென்றார். சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சேந்தமங்கலம் அருகே வந்த போது, பின்னால் வந்த டெம்போ லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில், தடுமாறி இருவரும் கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சுங்குவார்சத்திரம் போலீசார் இரு உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.