/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலை விபத்துகளில் இரண்டு பேர் பலி
/
சாலை விபத்துகளில் இரண்டு பேர் பலி
ADDED : நவ 12, 2024 08:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாலாஜாபாத்:செய்யூர் தாலுகா, கயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி, 41; தேவரியம்பாக்கம் தனியார் கம்பெனியில், செக்யூரிட்டியாக வேலை செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம்,வேலை முடித்து இருசக்கர வாகனத்தில் செய்யூருக்கு செல்லும்போது ,அய்யம்பேட்டை ஏரிவாய் பகுதியில் பின்னால் வந்த, 'டாடா இன்ட்ரா' வாகனம் மோதியது.
ரவி, காஞ்சிபுரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, இறந்தார். வாலாஜாபாத் போலீசார் விசாரிக்கின்றனர்.
அதேபோல, கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ், 55. இவர், நேற்று முன்தினம், தன்னுடைய இரண்டு சக்கர வாகனத்தில், செல்லும்போது, எதிரே வந்த, 'டாடா' லாரி மோதி இறந்தார். வாலாஜாபாத் போலீசார் விசாரிக்கின்றனர்.

