/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தங்கம் கடத்தல் இருவரிடம் விசாரணை
/
தங்கம் கடத்தல் இருவரிடம் விசாரணை
ADDED : ஜன 16, 2025 01:17 AM
சென்னை,சுற்றுலா விசாவில் துபாய் சென்று, அங்கிருந்து சென்னை விமான நிலையத்திற்கு நேற்று வந்த ஆண் பயணியின் உடமைகளை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். சந்தேகப்படும்படி பொருட்கள் எதுவும் இல்லை.
சந்தேகம் வலுத்ததால், அந்த பயணியை தனி அறைக்கு அழைத்துச் சென்று, சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். ஆடைக்குள், 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 490 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.
அதேபோல, சுற்றுலா விசாவில் சிங்கப்பூர் சென்று திரும்பிய, பெண் பயணியின் உடமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். உள்ளாடைக்குள், 28 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 380 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.
இருவரிடமும், 63 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அவர்களை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இரு பயணியரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.