/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கொரியரில் போதை மாத்திரை வாங்கிய இருவருக்கு 'காப்பு'
/
கொரியரில் போதை மாத்திரை வாங்கிய இருவருக்கு 'காப்பு'
கொரியரில் போதை மாத்திரை வாங்கிய இருவருக்கு 'காப்பு'
கொரியரில் போதை மாத்திரை வாங்கிய இருவருக்கு 'காப்பு'
ADDED : டிச 22, 2024 08:21 PM
ஸ்ரீபெரும்புதார்:ஒரகடம் அடுத்த காரணிதாங்கல் செக்போஸ்டில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, பல்சர் பைக்கில் வந்த இருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அதில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதை அடுத்து, அவர்களிடம் நடத்திய சோதனையில், ‛டிப்பென்டடோல்' எனும் போதை மாத்திரை இருப்பது தொரிந்தது.
இதையடுத்து, மண்ணிவாக்கம் பெரியார் தெருவைச் சேர்ந்த சுமன், 20, முடிச்சூர் லட்சுமி நகரைச் சேர்ந்த ஆகாஷ், 23, ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
இருவரும், மும்பையில் இருந்து ஆன்லைன் வாயிலாக கொரியரில் ஆர்டர் செய்து, போதை மாத்திரையை வாங்கி உபபோகித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.