/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது
/
மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது
ADDED : நவ 20, 2024 09:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல் பாலத்தில்,,நேற்று முன்தினம் இரவு, உத்திரமேரூர் போலீசார்,ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியே வந்த அசோக் லைலேண்ட் லாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில், 6 யூனிட் மணல் திருடி வந்தது தெரிந்தது. பின், லாரியை பறிமுதல் செய்து, மணல் கடத்தலில் ஈடுபட்ட நரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சதிஷ்குமார், 36, பாலுார் கிராமத்தைச் சேர்ந்த தனலட்சுமி, ஆகிய இரண்டு பேரையும் சாலவாக்கம் போலீசார் கைது செய்தனர்.

