/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது
/
வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது
ADDED : மார் 19, 2024 09:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் பினட் நாகா, 31; சுங்குவார்சத்திரம் அடுத்த சோகண்டியில் தங்கி, தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, சோகண்டி பஜார் பகுதியில் காய்கறி வாங்கிக்கொண்டு, சென்னை -- பெங்களூரு சர்வீஸ் சாலையில் நடந்து சென்றார்.
சோகண்டி டாஸ்மாக் அருகே வந்த போது, பின்னால் பைக்கில் வந்த இருவர், பினட் நாகாவை மடக்கி, அவரை தாக்கி, அவரிடமிருந்து 2,000 ரூபாயை பறித்து அங்கிருந்து தப்பினர்.
இது குறித்த புகாரின் படி, சுங்குவார்சத்திரம் போலீசார், செங்காடு கிராமத்தைச் சேர்ந்த டைசன், 22, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அமல்ராஜ், 23, ஆகிய இருவரை கைது செய்தனர்.

