/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புலிப்பாக்கத்தில் இரு போகம் விவசாயம் ஏரியை துார்வாரினால் சாத்தியம்
/
புலிப்பாக்கத்தில் இரு போகம் விவசாயம் ஏரியை துார்வாரினால் சாத்தியம்
புலிப்பாக்கத்தில் இரு போகம் விவசாயம் ஏரியை துார்வாரினால் சாத்தியம்
புலிப்பாக்கத்தில் இரு போகம் விவசாயம் ஏரியை துார்வாரினால் சாத்தியம்
ADDED : ஜூன் 16, 2025 12:58 AM

உத்திரமேரூர்:புலிப்பாக்கம் ஏரியை துார்வாரி ஆழப்படுத்தினால் இரு போகம் விவசாயம் சாத்தியமாகும்.
உத்திரமேரூர் ஒன்றியம், புலிப்பாக்கம் கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி, 200 ஏக்கர் பரப்பளவு உடையது.
மழை நேரங்களில் இந்த ஏரி முழுமையாக நிரம்பினால், அப்பகுதியின் 250 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த ஏரி கீழ்ஓடை, புலிப்பாக்கம் ஆகிய கிராமங்களின் பிரதான நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது. தற்போது, இந்த ஏரி முறையாக பராமரிப்பு இல்லாமல், கோரை புற்கள் வளர்ந்து உள்ளன.
மேலும், நீர்பிடிப்பு பகுதி மண்ணால் துார்ந்த நிலையிலும் உள்ளது.
இதனால், ஏரியில் மழை நேரங்களில் தண்ணீரை முழுதுமாக சேகரிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. ஏரியில் உள்ள தண்ணீரானது ஒரு போகத்திற்குகூட வராமல் விரைவில் வறண்டு விடுகிறது.
தொடர்ந்து, இருபோகம் செய்து வந்த இந்த பகுதியில், ஏரியில் தண்ணீர் வேகமாக வறண்டு விடுவதால், ஒரு போகம் மட்டுமே விவசாயம் செய்ய முடிகிறது.
எனவே, புலிப்பாக்கம் ஏரியை துார்வாரி சீரமைக்க, நீர்வளத் துறையினர் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.