/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
டூ -- வீலரில் சென்றவர் கார் மோதி உயிரிழப்பு
/
டூ -- வீலரில் சென்றவர் கார் மோதி உயிரிழப்பு
ADDED : ஏப் 01, 2025 12:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்,
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் சுதாகர், 35. இவர், 'ஹோண்டா யூனிகார்ன்' இருசக்கர வாகனத்தில், சென்னையிலிருந்து ஆரணி நோக்கி, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, காஞ்சிபுரம் அருகே, சேக்கான்குளம் பகுதியில், சுதாகரின் இருசக்கர வாகனத்தின் மீது, 'ஜாகுவார்' கார் ஒன்று, இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து, பொன்னேரிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.