/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையில் படர்ந்துள்ள மண் திட்டுகள் ஒரகடத்தில் டூ - வீலர் ஓட்டிகள் அவதி

ADDED : செப் 20, 2024 12:35 AM

ஸ்ரீபெரும்புதுார்:வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையின் இருப்புறமும் குவிந்துள்ள மண் குவியலை அகற்ற, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி தேசிய நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலை, காஞ்சிபுரம் -- பாலுார் உள்ளிட்ட முக்கிய சாலைகளை இணைக்கும் சாலையாக, வண்டலுார் - - வாலாஜாபாத் நெடுஞ்சாலை உள்ளது.
இந்த சாலை வழியே, காஞ்சிபுரம், வேலுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. தவிர, ஒரகடம், வல்லம், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள தொழிற்சாலைகளின் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர் உபயோகிக்கும் மிக முக்கிய சாலையாக இந்த சாலை விளங்கி வருகிறது.
இந்த நிலையில், போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலை, பராமரிப்பு இல்லாமல் உள்ளது. சாலையின் பல இடங்களில் ஆங்காங்கே மண் குவிந்து உள்ளது.
இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் மண் குவியலில் செல்லும் போது, நிலைத் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, நெடுஞ்சாலைத் துறையினர் சாலையோரங்களில் உள்ள மண் குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.