/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அத்துமீறி சாலையை கடக்கும் டூ - வீலர்களால் விபத்து அபாயம்
/
அத்துமீறி சாலையை கடக்கும் டூ - வீலர்களால் விபத்து அபாயம்
அத்துமீறி சாலையை கடக்கும் டூ - வீலர்களால் விபத்து அபாயம்
அத்துமீறி சாலையை கடக்கும் டூ - வீலர்களால் விபத்து அபாயம்
ADDED : மார் 19, 2025 12:36 AM

ஸ்ரீபெரும்புதுார்:சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், நாளொன்றுக்கு லட்சகணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சென்னையில் இருந்து, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் முதன்மை சாலையாக இந்த சாலை உள்ளது.
தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் வாகனங்களால், நெரிசல் மற்றும் விபத்துகளை தவிர்க்க, 654 கோடி ரூபாய் மதிப்பில், சென்னை -- பெங்களூரு தேசிய நான்குவழிச் சாலையை, ஆறுவழிச் சாலையாக அகலப்படுத்தும் பணி நடந்து வருகின்றன.
இந்த சாலையில், ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து பிரிந்து, குன்றத்துார் மற்றும் ஒரகடம் வழியாக சிங்கபெருமாள் கோவில் பகுதிகளுக்கு செல்லும் ஐஸ்கூல் சந்திப்பு உள்ளது.
நான்கு சாலை சந்திக்கும் இந்த பிரதான சந்திப்பில், ஸ்ரீபெரும்புதுார் சுற்றுவட்டாரத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் தொழிற்சாலை பேருந்துகளால், காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
போக்குவரத்து நெரிசல கட்டுபடுத்த, பேரிகேட் மற்றும் தடுப்புகள் அமைத்து, போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில், ஸ்ரீபெரும்புதுார் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதுாரில் போதிய போலீசார் இல்லாததால், அப்பகுதியில் உள்ள பேரிகேட்கள் இடையில் புகுந்து, தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் இருசக்கர வாகனங்களால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்கள், இடையில் புகுந்து வரும் இருசக்கர வாகனங்களால் கடும் அவதி அடைகின்றனர். திடீரென சாலையை கடக்கும் வாகனங்காளால், கட்டுபாட்டை இழந்து சாலையோர உள்ள பள்ளத்தில் விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, அப்பகுதியில், அத்துமீறி சாலையை கடக்கும் இருசக்கர வாகனங்களை கட்டுபடுத்த, ஸ்ரீபெரும்புதுார் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.