/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரயிலில் கஞ்சா கடத்திய இரு வாலிபர்கள் சிக்கினர்
/
ரயிலில் கஞ்சா கடத்திய இரு வாலிபர்கள் சிக்கினர்
ADDED : நவ 17, 2024 01:03 AM

சென்னை,வடமாநிலமான ஒடிசாவில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்துவதாக, அண்ணா நகர் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைந்தது.
அதன்படி, நேற்று முன்தினம் இரவு, பெரம்பூர் ரயில் நிலையத்தில் போலீசார் மாறுவேடத்தில் கண்காணித்தனர்.
அப்போது, பையுடன் வெளியில் வந்த இருவரை பிடித்து சோதித்தபோது, அவர்களிடம், 52,110 ரூபாய் மதிப்பில் 5,211 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. விசாரணையில், திருப்பத்துாரைச் சேர்ந்த சந்தோஷ், 27, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த யஸ்வந்த்ராஜ், 19, என்பது தெரிந்தது.
நண்பர்களான இருவரும், கஞ்சா போதைக்கு அடிமையானர்கள் என்பதால், கஞ்சாவை வாங்கி விற்றால் அதிக பணம் சாம்பாதிக்கலாம் என்ற நோக்கில், ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து, இருவரையும், நேற்று காலை சிறையில் அடைத்தனர்.