/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'யு - 16' சிட்டி பள்ளி கிரிக்கெட் லாலாஜி ஒமேகா அணி 'சாம்பியன்'
/
'யு - 16' சிட்டி பள்ளி கிரிக்கெட் லாலாஜி ஒமேகா அணி 'சாம்பியன்'
'யு - 16' சிட்டி பள்ளி கிரிக்கெட் லாலாஜி ஒமேகா அணி 'சாம்பியன்'
'யு - 16' சிட்டி பள்ளி கிரிக்கெட் லாலாஜி ஒமேகா அணி 'சாம்பியன்'
ADDED : பிப் 12, 2025 02:01 AM

சென்னை டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், சிட்டி பள்ளிகளுக்கு இடையிலான 'யு - 16' கிரிக்கெட் போட்டி, கடந்த 27ல் துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
மொத்தம், 66 பள்ளி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அனைத்து போட்டிகள் முடிவில், கொளப்பாக்கம் லாலாஜி மெமோரியல் ஒமேகா பள்ளி மற்றும் கெருகம்பாக்கம் பி.எஸ்.பி.பி., பள்ளி அணிகள் எதிர்கொண்டன.
கேளம்பாக்கம், தாகூர் கல்லுாரி மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில், முதலில் விளையாடிய பி.எஸ்.பி.பி., பள்ளி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், ஒன்பது விக்கெட் இழப்புக்கு, 177 ரன்களை அடித்தது.
அணியின் வீரர் கிருஷ்ணா 43, ஸ்ரீநாத் குமார் 51 ரன்கள் அடித்தனர். எதிர் அணி வீரர் சச்சின், ஐந்து விக்கெட் எடுத்தார்.
அடுத்து களமிறங்கிய லாலாஜி மெமோரியல் அணி, 41.4 ஓவர்களில், இரண்டு விக்கெட் இழப்புக்கு, 180 ரன்களை அடித்து வெற்றி பெற்றது.
அணியின் வீரர் பொன்முடி 60 ரன்களும், சச்சின் ஆட்டமிழக்காமல் 83 ரன்களும் அடித்தனர். இதனால், எட்டு விக்கெட் வித்தியாசத்தில், லாலாஜி மெமோரியல் ஒமேகா பள்ளி வெற்றி பெற்று, 'சாம்பியன்' கோப்பையை தட்டிச் சென்றது.

