/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தடுப்பு இல்லாத கால்வாய் வாகன ஓட்டிகள் அச்சம்
/
தடுப்பு இல்லாத கால்வாய் வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : ஜன 05, 2024 10:04 PM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுாரில், தடுப்புகள் இன்றி உள்ள கழிவுநீர் கால்வாயால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் தேரடி பேருந்து நிறுத்தத்தில் இருந்து, ராமானுஜர் கோவில் மற்றும் குளம் செல்லும் சன்னிதி தெரு உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், இச்சாலை வழியே சென்று வருகின்றனர்.
இந்நிலையில், இச்சாலையில் மின் செயற்பொறியாளர் அலுவலகம் அருகே உள்ள கழிவுநீர் கால்வாய், தடுப்புகள் இன்றி திறந்த நிலையில் உள்ளது.
இதனால், இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், எதிர் வரும் வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும்போது, சாலையோரம் உள்ள கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, விபத்தை தவிர்க்க, கால்வாய்க்கு தடுப்புச்சுவர் அமைக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.