/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தடுப்பு இல்லாத ஏரிக்கரை சாலை சிறுவஞ்சூர் வாகன ஓட்டிகள் அச்சம்
/
தடுப்பு இல்லாத ஏரிக்கரை சாலை சிறுவஞ்சூர் வாகன ஓட்டிகள் அச்சம்
தடுப்பு இல்லாத ஏரிக்கரை சாலை சிறுவஞ்சூர் வாகன ஓட்டிகள் அச்சம்
தடுப்பு இல்லாத ஏரிக்கரை சாலை சிறுவஞ்சூர் வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : செப் 24, 2024 10:51 PM

ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், நாட்டரசம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட சிறுவஞ்சூர் கிராமத்தில் 300க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இப்பகுதியினர் நாட்டரசம்பட்டு ஏரிக்கரை சாலை வழியாக, செரப்பனஞ்சேரி, படப்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.
தவிர, ஒரத்துார், வடமேல்பாக்கம், காவனுார், பொத்தேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமானோர் செல்கின்றனர். இந்த நிலையில், ஏரிக்கரை சாலையில் குறுகலாக உள்ளதால், இரு திசையில் இருந்தும் வாகனங்கள் எதிர் எதிரே வரும் போது, வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
மேலும், இருசக்கர வாகன ஓட்டிகள் வழிவிட ஒதுங்கும் போது, எதிர்பாராத விதமாக, ஏரிக்கரையில் இருந்து தவறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் பணி முடிந்து செல்லும் போது, மின் விளக்கு இல்லாத இந்த சாலையில், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, அப்பகுதியினர் மற்றும் வாகன ஓட்டிகளின் நலம் கருதி, சிறுவஞ்சூர் செல்லும் ஏரிக்கரை சாலையின் இருபுறமும் தடுப்பு ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.