/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற அழைப்பு
/
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற அழைப்பு
ADDED : ஏப் 09, 2025 09:43 PM
காஞ்சிபுரம்:வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ், பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கு, 200 ரூபாயும், தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300 ரூபாயும், பிளஸ் 2 தேர்ச்சி அல்லது பட்டய படிப்ப தேர்ச்சி பெற்றவர்களுக்கு 400 ரூபாயும், பட்டபடிப்பு முடித்தவர்களுக்கு 600 ரூபாயும், மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் 1,000 ரூபாயும் வழங்கப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், இத்திட்டத்தின்கீழ், உதவித்தொகை பெற, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, குறைந்தது ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம், 72,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்கலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.