/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பேராசிரியர் பதவி உயர்வுக்கான ஆவணம் பல்கலையில் 'மிஸ்சிங்' சல்லடை போட்டு தேடிய ஊழியர்கள்
/
பேராசிரியர் பதவி உயர்வுக்கான ஆவணம் பல்கலையில் 'மிஸ்சிங்' சல்லடை போட்டு தேடிய ஊழியர்கள்
பேராசிரியர் பதவி உயர்வுக்கான ஆவணம் பல்கலையில் 'மிஸ்சிங்' சல்லடை போட்டு தேடிய ஊழியர்கள்
பேராசிரியர் பதவி உயர்வுக்கான ஆவணம் பல்கலையில் 'மிஸ்சிங்' சல்லடை போட்டு தேடிய ஊழியர்கள்
ADDED : நவ 12, 2025 10:52 PM

-: நிதித்துறை கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டிய சென்னை பல்கலை பேராசிரியர் பதவி உயர்வுக்கான ஆவணம் மாயமானதால், அதை பல்கலை ஊழியர்கள் சல்லடை போட்டு தேடியது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தின் மிகப் பழமையான பல்கலைகளில், சென்னை பல்கலை முதன்மையானது. பல அறிஞர்கள், இந்த பல்கலையில் பட்டம் பெற்றவர்கள். ஆனால், தற்போது சென்னை பல்கலை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதன் காரணமாக, பல்கலையின் நிர்வாகச் செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னை பல்கலையின் நிதித்துறை கூட்டம், தலைமை செயலகத்தில், உயர் கல்வித்துறை செயலர் சங்கர் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், நிதித்துறை சிறப்பு செயலர் அருண் சுந்தர் தயாள், கல்லுாரி கல்வி இயக்குநர் சுந்தரவல்லி, சென்னை பல்கலை பதிவாளர் ரீட்டா ஜான் உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், சென்னை பல்கலை ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கான பதவி உயர்வு பட்டியல் ஒப்புதல் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, பதவி உயர்வு பட்டியலில் உள்ளவர்களில், தணிக்கை குற்றச்சாட்டு யாருக்கேனும் உள்ளதா என்பது குறித்த விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
சென்னை பல்கலையில் கடந்த செப்., 1ல் உதவி பேராசிரியரில் இருந்து இணைப் பேராசிரியர்; இணைப் பேராசிரியரில் இருந்து பேராசிரியராக பதவி உயர்வு பெறும் பேராசிரியர் என, மொத்தம் ஐந்து பேருக்கு நேர்முகத் தேர்வு நடந்தது.
இதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் அடங்கிய ஆவணத்தை, நேற்றைய நிதித்துறை கூட்டத்தில் சமர்பிக்க, பல்கலை பதிவாளர் ரீட்டா ஜானிடம், உயர் கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
ஆனால், பதிவாளரோ, 'ஆவணம் எங்கு உள்ளது என தெரியவில்லை' என கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த உயர் கல்வித்துறை அதிகாரிகள், பல்கலையில் தேடிப் பார்த்து சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
இதையடுத்து, பல்கலையில் துணைவேந்தர் அறை, பதிவாளர் அறை என, அனைத்து பகுதிகளிலும் ஆவணத்தை சல்லடை போட்டு, ஆவணங்களை தேடினர். இறுதியாக, ஆவணம் கிடைத்ததாகவும், அதை உயர் கல்வித்துறை மற்றும் நிதித்துறையிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தகவல் வெளியானது. பாதுகாக்க வேண்டிய ஆவணத்தை, காணவில்லை என பல்கலை ஊழியர்கள் தேடியது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- நமது நிருபர்

