/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆரம்ப சுகாதார நிலைய நுழைவாயிலில் தடுப்பு இல்லாத மழைநீர் வடிகால்வாய்
/
ஆரம்ப சுகாதார நிலைய நுழைவாயிலில் தடுப்பு இல்லாத மழைநீர் வடிகால்வாய்
ஆரம்ப சுகாதார நிலைய நுழைவாயிலில் தடுப்பு இல்லாத மழைநீர் வடிகால்வாய்
ஆரம்ப சுகாதார நிலைய நுழைவாயிலில் தடுப்பு இல்லாத மழைநீர் வடிகால்வாய்
ADDED : செப் 19, 2025 02:21 AM

ஸ்ரீபெரும்புதுார்:மொளச்சூர் ஆரம்ப சுகாதார நிலைய நுழைவாயிலில், தடுப்பு இல்லாமல் உள்ள மழைநீர் வடிகால்வாயால், ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் விபத்தில் சிக்கும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், சுங்குவார்சத்திரம் அருகே, மொளச்சூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. சுற்றுவட்டாரத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர், தினமும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், ஆரம்ப சுகாதார நிலைய நுழைவாயிலில், திறந்தவெளி மழைநீர் வடிகால்வாய் உள்ளது. இந்த மழைநீர் வடிகால்வாயை கடந்துதான் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டும்.
இந்நிலையில், மழைநீர் வடிகால்வாயின் இரண்டு பக்கங்களிலும் தடுப்பு இல்லை. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்கும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.
எதிரெதிரே வாகனங்கள் வரும்போது, நிலை தடுமாறி மழைநீர் கால்வாயில் விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
அதேபோல, விபத்தில் சிக்கி முதலுதவி சிகிச்சைக்காக, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் ஆம்புலன்ஸ், மழைநீர் கால்வாயில் கவிழ்ந்து விபத்து ஏற்படும் அச்சத்தில் சென்று வருகின்றன.
எனவே, மொளச்சூர் ஆரம்ப சுகாதார நிலைய நுழைவாயிலில் உள்ள மழைநீர் வடிகால்வாய் மீது தடுப்பு அமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.