/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வர்ணம் பூசாத வேகத்தடைகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
வர்ணம் பூசாத வேகத்தடைகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
வர்ணம் பூசாத வேகத்தடைகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
வர்ணம் பூசாத வேகத்தடைகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : நவ 16, 2024 12:41 AM

ஸ்ரீபெரும்புதுார்:சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த வடமங்கலம் சந்திப்பில் இருந்து, வடமங்கலம் வழியாக பண்ணுார் செல்லும் பிரதான சாலை உள்ளது.
இந்த சாலை வழியாக பூதேரிப்பண்டை, வடமங்கலம், வயலுார், பண்ணுார், திருப்பந்தியூர் உள்ளிட்ட பல்வேறு கிரமத்தினர், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் ஏற்படும் விபத்தை தடுக்கும் வகையில், வடமங்கலம் சந்திப்பு அருகே வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வேகத்தடை மீது வெள்ளை நிற வர்ணம் பூசவில்லை. மேலும், வேகத்தடையை அறிவுறுத்தும் எச்சரிக்கை பலகையும் அமைக்கவில்லை.
இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், வேகத்தடை இருப்பது தெரியாமல், நிலைத்தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, வடமங்கலம் சாலையில் உள்ள வேகத்தடைகள் மீது வெள்ளை நிற வர்ணம் பூச, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.