ADDED : அக் 16, 2024 01:07 AM
ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் அடுத்த பனப்பாக்கத்தில் இருந்து, எறையூர், வைப்பூர் செல்லும் சிப்காட் சாலை பிரிந்து செல்கிறது. தவிர, இந்த சாலையில் 50க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில், ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில், வளைவு மற்றும் சந்திப்புகளில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வேகத்தடை மீது வெள்ளை நிற வர்ணம் பூசவில்லை. மேலும், வேகத்தடையை அறிவுறுத்தும் எச்சரிக்கை பலகையும் அமைக்கவில்லை.
குறிப்பாக, இரவு நேரங்களில் செல்லும்இருசக்கர வாகன ஒட்டிகள், வேகத்தடை இருப்பது தெரியாமல், நிலைத்தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர்.
எனவே, வேகத்தடைகள் மீது வெள்ளை நிற வர்ணம் பூச, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.