/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூர் ஏரியின் ஷட்டரில் ஓட்டை வீணாகும் தண்ணீரை தடுக்க வலியுறுத்தல்
/
உத்திரமேரூர் ஏரியின் ஷட்டரில் ஓட்டை வீணாகும் தண்ணீரை தடுக்க வலியுறுத்தல்
உத்திரமேரூர் ஏரியின் ஷட்டரில் ஓட்டை வீணாகும் தண்ணீரை தடுக்க வலியுறுத்தல்
உத்திரமேரூர் ஏரியின் ஷட்டரில் ஓட்டை வீணாகும் தண்ணீரை தடுக்க வலியுறுத்தல்
ADDED : ஏப் 15, 2025 12:53 AM

உத்திரமேரூர்,
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரிய ஏரிகளுள் ஒன்றாக இருப்பது உத்திரமேரூர் ஏரி. பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரிநீரை பயன்படுத்தி 5,400 ஏக்கர் பரப்பளவு, விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த ஏரியில் உள்ள கரைகள், கலங்கல், மடை, மதகு ஆகியவை முறையாக பராமரிப்பு இல்லாததால் பழுதடைந்து இருந்தது. அதை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி, 2023ம் ஆண்டில், 18.80 கோடி ரூபாய் செலவில், ஏரிக்கரை பலப்படுத்தப்பட்டு தண்ணீர் வெளியேறாமல் இருக்க, மதகு மற்றும் மடை ஷட்டர்களில் பழுது பார்க்கப்பட்டது.
இந்நிலையில், 'பெஞ்சல்' புயலின்போது செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அனுமந்தண்டலம் தடுப்பணை வழியாக வெள்ளநீர் வந்து உத்திரமேரூர் ஏரி முழுமையாக நிரம்பியது.
தற்போது, உத்திரமேரூர் பகுதியில் நவரை பருவ நெல் அறுவடை பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதனால், தற்போது ஏரிகளில் உள்ள மதகு, மடை ஆகியவை வழியாக, விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடாமல் மூடப்பட்டு உள்ளன.
இந்நிலையில், விக்ரமநல்லூர் பகுதியில் உள்ள மடை ஷட்டர் சேதமடைந்து ஓட்டை ஏற்பட்டு, அவ்வழியே தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.
இதை தடுக்க, துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர். இதனால், விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டிய தண்ணீர் வீணாகி வருகிறது.
எனவே, சேதமடைந்த ஷட்டர் வழியே வெளியேறும் தண்ணீரை தடுக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

