/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமான மின் கம்பத்தை அகற்ற வலியுறுத்தல்
/
சேதமான மின் கம்பத்தை அகற்ற வலியுறுத்தல்
ADDED : நவ 22, 2025 01:04 AM

ஸ்ரீபெரும்புதுார்: சுங்குவார்சத்திரத்தில் இருந்து மதுரமங்கலம் செல்லும் சாலையோரம், கான்கிரீட் உதிர்ந்து சேதமடைந்து உள்ள மின் கம்பத்தை, அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, சுங்குவார்சத்திரத்தில் இருந்து மதுரமங்கலம் செல்லும் சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையில், காந்துார் அருகே சாலையோரம் உள்ள மின் மோட்டார் அறைக்கு, மின்சாரம் கொண்டு செல்ல அமைக்கப்பட்ட மின் கம்பம், கான்கிரீட் உதிர்ந்து பல ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் உள்ளது.
சிதிலம் அடைந்து, எப்போது வே ண்டுமானாலும் விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் சென்று வருகி ன்றனர்.
எனவே, சாலையோரம் அபாய நிலையில் உள்ள மின் கம்பத்தை அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எ ன, அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

