/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாநகராட்சி பூங்காவை சீரமைக்க வலியுறுத்தல்
/
மாநகராட்சி பூங்காவை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 24, 2025 12:45 AM

காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாநகராட்சி, 51வது வார்டு, விஷ்ணு நகரில் சீரழிந்த நிலையில் உள்ள பூங்காவை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
மத்திய அரசின், 'அம்ரூட்' திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் மாநகராட்சி 51வது வார்டு, தேனம்பாக்கம் விஷ்ணு நகரில், ஐந்து ஆண்டுகளுக்கு முன் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட்டது.
இப்பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்ள சிமென்ட் கல் பதித்த நடைபாதை, அமர்வதற்கு கிரானைட் கல் இருக்கை, சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்ள், அழகிய புல் தரை, ஒளிரும் மின்விளக்கு, கழிப்பறை என உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
தேனம்பாக்கம் விஷ்ணு நகர் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிவாசிகள் பூங்காவை பயன்படுத்தி வந்தனர். முறையான பராமரிப்பு இல்லாததால், சிமென்ட் கல் பதித்த நடைபாதையில் புல் முளைத்துள்ளது. அழகுக்காக செடிகள் நடப்பட்ட பகுதி மற்றும் கழிப்பறைக்கு செல்லும் பாதையில் செடி, கொடிகள் வளர்நதுள்ளன.
சிறுவர்களுக்கான ஊஞ்சல், சுறுக்கு விளையாட்டு, சீசா உள்ளிட்ட உபகரணங்களும், இரவு நேரத்தில் வெளிச்சம் தரும் வகையில் அமைக்கப்பட்டுளள மின் விளக்குகளும் பழுதடைந்துள்ளதால், பூங்காவை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
எனவே, லட்சக்கணக்கான ரூபாய் செலவில், அமைக்கப்பட்ட விஷ்ணு நகர் பூங்காவை சீரமைப்பதோடு, முறையாக பராமரிக்க ஊழியர்களை நியமிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.