/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புதர்மண்டிய மழைநீர் கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
/
புதர்மண்டிய மழைநீர் கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
புதர்மண்டிய மழைநீர் கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
புதர்மண்டிய மழைநீர் கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : மார் 15, 2024 12:21 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 23வது வார்டு, கன்னி கோவில் தெருவில் இருந்து, மாகாளியம்மன் கோவில் தெரு வழியாக மழைநீர் செல்லும் வகையில் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கால்வாயை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், கால்வாயில் செடி, கொடிகள் புதர்போல மண்டி அடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், மழைக்காலத்தில் கால்வாய் வாயிலாக மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது. மேலும், குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகும் சூழலும் உள்ளது.
எனவே, மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.