/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
/
சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : பிப் 06, 2025 12:11 AM

வையாவூர்:வாலாஜாபாத் ஒன்றியம் வையாவூர் ஊராட்சி, தர்மநாயக்கன்பட்டரை பிரதான சாலை வழியாக ஏனாத்துார், காஞ்சிபுரம். வையாவூர், களியனுார், நத்தப்பேட்டை, முத்தியால்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், சிட்கோ தொழிற்பேட்டை, அசோக் நகர் பிரிவு மின்வாரிய அலுவலகம் அமைந்துள்ள பகுதியில், ஆங்காங்கே ஜல்லிக் கற்கள் பெயர்ந்து சாலை சேதமடைந்துள்ளது. இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பழுதாகின்றன. மேலும், நிலைதடுமாறி விபத்தில் சிக்கி வருகின்றன.
எனவே, சேதமடைந்த தர்மநாயக்கன்பட்டரை சாலையை சீரமைக்க, வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.