/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
/
சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : அக் 13, 2024 12:57 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில், ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவில், ஜவஹர்லால் நேரு காய்கறி மார்க்கெட், டாஸ்மாக், நகை, உணவகம், பலசரக்கு மளிகை கடை என, வணிக வளாகம் நிறைந்த பகுதியாக உள்ளதால், எப்போதும் வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் நிறைந்த சாலையாக உள்ளது.
இந்நிலையில், அப்பகுதியில் நிலத்தடியில் புதைக்கப்பட்ட குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாகவும், சமீபத்தில் பெய்த மழையின் காரணமாகவும் மண் அரிப்பு ஏற்பட்டு சாலையின் நடுவில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது.
மழைநீர் தேங்குவதால், பள்ளம் இருப்பது தெரியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, சேதமடைந்த சாலையை, சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.