/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி மருத்துவமனை எதிரில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தல்
/
காஞ்சி மருத்துவமனை எதிரில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தல்
காஞ்சி மருத்துவமனை எதிரில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தல்
காஞ்சி மருத்துவமனை எதிரில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தல்
ADDED : மார் 18, 2024 03:25 AM

காஞ்சிபுரம் காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இம்மருத்துவமனைக்கு புறநோயாளிகள், உள்நோயாளிகள், சிகிச்சை பெறுவோரை பார்க்க வருவோர் என, தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில், மருத்துவமனை பகுதியில் வேகத்தடை அமைக்கப்படவில்லை.
இதனால், மருத்துவமனையில் இருந்து எதிரில் உள்ள பேருந்து நிறுத்தம், டீ கடை, உணவகத்திற்கு சென்று வருவோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இச்சாலையில் செல்லும் வாகனங்களால், மருத்துவமனைக்கு சென்று வருவோர் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பாதசாரிகள் விபத்தில் சிக்காமல் சிரமமின்றி சென்று வரும் வகையில், வேகத்தடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.