/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வேகவதி ஆற்று பால பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
/
வேகவதி ஆற்று பால பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
வேகவதி ஆற்று பால பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
வேகவதி ஆற்று பால பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
ADDED : ஏப் 22, 2025 11:43 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, கன்னிகாபுரம் - தாட்டித்தோப்பு, முருகன் குடியிருப்பு இடையே செல்லும் வேகவதி ஆற்றின் குறுக்கே, 40 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட தரைப்பாலம், 2022ம் ஆண்டு, வடகிழக்கு பருவமழையின்போது ஆற்றில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் சேதமானதால், தாட்டித்தோப்பு மற்றும் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், 2 கி.மீ., துாரம் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால், சேதமடைந்த பழைய பாலத்தை அகற்றிவிட்டு புதிதாக உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தினர்.
இதை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில், மூலதன மானிய திட்டம் 2022 -- 23ன் கீழ், 2.29 கோடி ரூபாய் மதிப்பில், கன்னிகாபுரம் - தாட்டித்தோப்பு இடையே வேகவதி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் அமைக்க, 2023ம் ஆண்டு, ஜூலை மாதம், பூமி பூஜை போடப்பட்டது.
இதை தொடர்நது, ஒரு ஆண்டுக்குப்பின், கடந்த ஆண்டு, ஜூலை மாதம், பாலம் கட்டுமானப் பணி துவங்கி, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
அணுகு சாலை அமைத்தல், மின்விளக்கு வசதி ஏற்படுத்துல் உள்ளிட்ட பணிகள் நிலுவையில் உள்ளது. இப்பணியை விரைந்து முடிந்து பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கன்னிகாபுரம் - தாட்டித்தோப்பு இடையே வேகவதி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுமானப் பணி நிறைவு முழுமையாக பெறும் நிலையில் உள்ளது. மேலும், பாலத்திற்கு இருபுறமும் அணுகு சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
இதில், வடக்கு பகுதியில், காஞ்சிபுரம் -- செங்கல்பட்டு சாலையில் இருந்து, பாலத்துடன் இணையும் வகையில், சாலை அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம்.
அரசிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன், டெண்டர் விடப்பட்டதும், இரு மாதங்களில் சாலை அமைக்கும் பணி முடிக்கப்பட்டு, வேகவதி ஆற்று பாலம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

