/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
லிங்காபுரம் சாலையோர பள்ளத்திற்கு தடுப்பு ஏற்படுத்த வலியுறுத்தல்
/
லிங்காபுரம் சாலையோர பள்ளத்திற்கு தடுப்பு ஏற்படுத்த வலியுறுத்தல்
லிங்காபுரம் சாலையோர பள்ளத்திற்கு தடுப்பு ஏற்படுத்த வலியுறுத்தல்
லிங்காபுரம் சாலையோர பள்ளத்திற்கு தடுப்பு ஏற்படுத்த வலியுறுத்தல்
ADDED : ஜூலை 27, 2025 12:44 AM

வாலாஜாபாத்:லிங்காபுரம் சாலையோரத்தில், நிலத்தையொட்டி உள்ள ஆபத்தான பள்ளம் அப்பகுதி வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.
வாலாஜாபாத் - செங்கல்பட்டு சாலையில், புளியம்பாக்கம் அடுத்த சங்கராபுரம் கூட்டுச்சாலை உள்ளது. சங்கராபுரத்தில் இருந்து லிங்காபுரம் வழியாக தேவரியம்பாக்கம் செல்லும் சாலை உள்ளது.
சங்கராபுரம் சுற்றுவட்டார பகுதியில் வசிப்போர், இச்சாலையை பயன்படுத்தி, வாலாஜாபாத், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ஒரகடம் உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று வருகின்றனர்.
இச்சாலையில் சங்கராபுரம் அடுத்த லிங்காபுரத்தில் இருந்து, தேவரியம்பாக்கம் வரையிலான இரண்டு கி.மீ., துாரம் கொண்ட சாலை உள்ளது. இதில், லிங்காபுரத்தின் ஒரு பகுதியில் சாலையின் இருபுறமும் விவசாய நிலங்கள் உள்ளன.
சாலை பகுதி மேடாகவும், சாலை ஒட்டிய விவசாய நிலங்கள் மிகவும் தாழ்வாகவும் உள்ளன.
மேலும், இச்சாலை குறுகியதாகவும் அப்பகுதியில் அபாயகரமான வளைவும் உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, இரவு நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, இச்சாலையோர பள்ளத்தில் வாகனங்கள் கவிழ்ந்து விபத்து ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு தடுப்புகள் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.