/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மேல்பொடவூர் குளம் துார்வாரி பராமரிக்க வலியுறுத்தல்
/
மேல்பொடவூர் குளம் துார்வாரி பராமரிக்க வலியுறுத்தல்
மேல்பொடவூர் குளம் துார்வாரி பராமரிக்க வலியுறுத்தல்
மேல்பொடவூர் குளம் துார்வாரி பராமரிக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 05, 2025 02:16 AM

வாலாஜாபாத்,:வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது மேல்பொடவூர் கிராமம். இந்த கிராமத்தில், ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில், முத்து மாரியம்மன் கோவில் அருகே கிராமத்திற்கு சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பிலான பொதுக்குளம் உள்ளது.
அப்பகுதிக்கான நிலத்தடி நீர் மட்டம் சீராக இருக்கவும், கால்நடைகளுக்கான குடிநீர் ஆதாரமாகவும் இந்த குளம் இருந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த ஆண்டுகளில் இக்குளம் முறையான பரtமரிப்பின்மை காரணமாக துார்ந்து, குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவை சேர்ந்து சுகாதரமற்ற நிலையில் உள்ளது.
எனவே, இக்குளத்தை துார்வாரி, குளத்தில் வளர்ந்த முட்புதர்களை அகற்றி, குளக்கரையை பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.