/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புதர்மண்டிய வடிகால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
/
புதர்மண்டிய வடிகால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : நவ 20, 2024 12:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், களக்காட்டூர் ஊராட்சி, குருவிமலை பள்ளத்தெருவில், மழைநீர் செல்லும் வடிகால்வாய் உள்ளது. இக்கால்வாயை முறையாக பராமரிக்காததால், செடி, கொடிகள் புதர் மண்டியுள்ளதால், மழைநீர் செல்வதற்கான வழி தெரியாமல் துார்ந்த நிலையில் உள்ளது.
இதனால், மழைகாலத்தில் கால்வாய் வாயிலாக மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதற்குள் குருவிமலை பள்ளத் தெருவில் உள்ள மழைநீர் கால்வாயை துார்வாரி சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.