/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கான்கிரீட் சாலை சேதம் புதுப்பிக்க வலியுறுத்தல்
/
கான்கிரீட் சாலை சேதம் புதுப்பிக்க வலியுறுத்தல்
ADDED : செப் 08, 2025 12:45 AM

உத்திரமேரூர்:ஒழுகரையில் சேதம்அடைந்துள்ள கான்கிரீட் சாலையை புதுப்பிக்க, ஊரக வளர்ச்சி துறையினருக்கு கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், ஒழுகரை ஊராட்சியில், ஓங்கூர், ஒழுகரை, சின்ன ஒழுகரை ஆகிய துணை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தில், 3,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள, ஒழுகரை ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில், 30 ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலை உள்ளது. தற்போது, இந்த சாலை முறையாக பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து உள்ளது.
மழை நேரங்களில் சேதமடைந்த சாலையில் தண்ணீர் தேங்குவதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இச் சாலையை புதுப்பிக்க அப்பகுதி மக்கள், பல்வேறு அரசு குறைதீர் முகாம்களில் கோரிக்கை மனு அளி த்து வருகின்றனர்.
எனவே, ஒழுகரை ஆதி திராவிடர் குடியிருப்பு பகுதி யில் சேதமடைந்துள்ள, கான்கிரீட் சாலையை புதுப்பிக்க, ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுக்க, கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.