/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழைநீர் வடிகால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
/
மழைநீர் வடிகால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 20, 2025 01:55 AM

விப்பேடு:விப்பேடு கிராமத்தில், விவசாய நிலங்களில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
காஞ்சிபுரம் ஒன்றியம், விப்பேடு ஊராட்சியில் உள்ள விவசாய நிலங்களில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில், வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயை முறையாக துார்வாரி பராமரிக்காததால், இக்கால்வாயில் கோரைபுற்கள், செடி, கொடி, கோரைப்புல் வளர்ந்து கால்வாயில் நீர்வழித்தடம் துார்ந்த நிலையில் உள்ளது.
இதனால், மழை பெய்தால், இக்கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர், விவசாய நிலங்களை சூழ்ந்து பயிர்கள் வீணாகும் நிலை உள்ளது.
எனவே, தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதற்குள், விவசாய நிலங்களில் இருந்து மழைநீர் வெளியேறும் கால்வாயை துார்வாரி சீரமைக்க காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விப்பேடு விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.