/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இருளில் மூழ்கிய குளக்கரை சாலை மின்விளக்கு சீரமைக்க வலியுறுத்தல்
/
இருளில் மூழ்கிய குளக்கரை சாலை மின்விளக்கு சீரமைக்க வலியுறுத்தல்
இருளில் மூழ்கிய குளக்கரை சாலை மின்விளக்கு சீரமைக்க வலியுறுத்தல்
இருளில் மூழ்கிய குளக்கரை சாலை மின்விளக்கு சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : மே 09, 2025 01:38 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி 22வது வார்டு திருக்காலிமேடு சின்னவேப்பங்குளக்கரை சாலையில் 25க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இச்சாலை வழியாக சின்ன காஞ்சிபுரம் பகுதிக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள தெரு மின்விளக்குகள் பழுதடைந்து ஒளிராமல் உள்ளதால், இச்சாலை இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
இதனால் இச்சாலை வழியாக நடந்து செல்வோர் அச்சத்துடன் செல்கின்றனர். மேலும், சாலையோரம் உள்ள சின்ன வேப்பங்குளத்திற்கு தடுப்புச்சுவர் இல்லாததால் வேகமாக வரும் வாகனங்கள், நிலை தடுமாறி குளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, சின்னவேப்பங்குளக்கரை சாலையில், பழுதடைந்துள்ள தெருமின்விளக்கை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என,
வாகன ஓட்டிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.