/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிறுபாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
/
சிறுபாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
சிறுபாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
சிறுபாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
ADDED : மார் 27, 2025 12:39 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், சிறுபினாயூர் கிராமத்தில், 2,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.
இங்குள்ள, விவசாயிகள் தங்களுடைய விளை நிலங்களுக்கு செல்ல, காலனி வழியாக உள்ள மண் பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த மண் பாதையில் உள்ள கால்வாய் மீது, சிறுபாலம் அமைக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி, 2023 -- - 24ம் நிதி ஆண்டில், பிரதம மந்திரி கிராமோதயா யோஜனா திட்டத்தின் கீழ், 2 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய சிறுபாலம் கட்டும் பணி, 10 நாட்களுக்கு முன் தொடங்கியது.
அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த தனி நபர் ஒருவர், மண் பாதை தனக்கு சொந்தமானது என்றும், ஆகவே சிறுபாலம் அமைக்கக்கூடாது என தகராறு செய்துள்ளார்.
இதனால், சிறுபாலம் கட்டும் பணி நிறுத்தப்பட்டு உள்ளது. எனவே, சிறுபினாயூரில் சிறுபாலம் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமாறு, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.