/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திருமுக்கூடலில் குறுகிய சாலை: விரிவாக்கம் செய்ய வலியுறுத்தல்
/
திருமுக்கூடலில் குறுகிய சாலை: விரிவாக்கம் செய்ய வலியுறுத்தல்
திருமுக்கூடலில் குறுகிய சாலை: விரிவாக்கம் செய்ய வலியுறுத்தல்
திருமுக்கூடலில் குறுகிய சாலை: விரிவாக்கம் செய்ய வலியுறுத்தல்
ADDED : டிச 21, 2025 04:22 AM
உத்திரமேரூர்: திருமுக்கூடலில் குறுகியசாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது திருமுக்கூடல் கிராமம். சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தோர், திருமுக்கூடல் சாலை வழியாக காஞ்சிபுரம், வாலாஜாபாத்,செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
மேலும், ஒரகடம், சிங்க பெருமாள் கோவில், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு, இச்சாலை வழியாக வேன் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
இச்சாலையில், திருமுக்கூடல் ஏரிக்கரை அருகே துவங்கி வெங்கடேச பெருமாள் கோவில் அருகிலான சாலை வரை மிகவும் குறுகியதாக உள்ளது.
இதனால், இச்சாலை பகுதியில் எதிரே வரும் வாகனங்கள் ஒன்றையொன்று கடக்க முடியாமல்வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
எனவே, திருமுக்கூடல் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.