/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பயன்பாடற்ற அரசு கட்டடங்கள் பராமரிக்க வலியுறுத்தல்
/
பயன்பாடற்ற அரசு கட்டடங்கள் பராமரிக்க வலியுறுத்தல்
ADDED : மார் 13, 2025 01:36 AM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சியில், பயன்பாட்டில் இருந்த பேரூராட்சி அலுவலக கட்டடம் கைவிடப்பட்டு, தற்போது ஒரு பகுதி கிளை நுாலகமாக செயல்படுத்தப்படுகிறது. மற்ற கட்டடங்கள் வீணாகி வருகின்றன.
வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே புதிய பி.டி.ஒ., அலுவலகம் அமைந்ததையடுத்து, ஆறு ஆண்டுகளுக்கு முன் வட்டார வளர்ச்சி அலுவலகமாக இயங்கிய வளாகப் பகுதியின் பல்வேறு கட்டடங்கள் தற்போது பயன்பாடு இல்லாமல் உள்ளது.
அப்பகுதியில், வேளாண் துறைக்கான சில கட்டடங்களும் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகிறது.
இவ்வாறாக கைவிடப்பட்ட கட்டடங்களுக்கு மாறாக புதிதான கட்டட வசதி ஏற்படுத்தப்பட்டு, அதில் அரசு அலுவலகங்கள் தொடர்ந்து செயல்படுகின்றன.
இந்நிலையில், கைவிடப்பட்ட கட்டடங்களில் சில, தரம் வாய்ந்ததாக பலவீனமின்றி இருந்தும் கூட பயன்பாடு இல்லாமல் வீணாகி வருவதாக கூறப்படுகிறது.
மேலும், இக்கட்டடங்கள் சமீப காலமாக சமூக விரோதிகளின் கூடாரமாக விளங்கி வருவதாக அப்பகுதியைச் சேர்ந்த பல தரப்பு மக்களும் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர்.
எனவே, வாலாஜாபாதில் பயன்பாடு இல்லாத, தரம் வாய்ந்த அரசு கட்டடங்களை வெள்ளையடித்தல் உள்ளிட்ட பணிகள் செய்து சீரமைத்து, புதிதான அரசு திட்டங்களுக்கான கட்டடமாக பயன்படுத்தும் வகையில் பராமரிக்க வேண்டும் என, அப்பகுதி சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.