/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கால்வாயில் முறிந்து விழுந்த மரத்தை அகற்ற வலியுறுத்தல்
/
கால்வாயில் முறிந்து விழுந்த மரத்தை அகற்ற வலியுறுத்தல்
கால்வாயில் முறிந்து விழுந்த மரத்தை அகற்ற வலியுறுத்தல்
கால்வாயில் முறிந்து விழுந்த மரத்தை அகற்ற வலியுறுத்தல்
ADDED : ஜூன் 28, 2025 02:06 AM

காஞ்சிபுரம்::காஞ்சிபுரம் மஞ்சள்நீர் கால்வாயில் முறிந்து விழுந்துள்ள மரத்தை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் நகரில் பெய்யும் மழைநீர் செல்லும் வகையில் அமைக்கப்பட்ட மஞ்சள் நீர் கால்வாய், கைலாசநாதர் கோவில் அருகே உள்ள புத்தேரி பகுதியில் துவங்கி, கிருஷ்ணன் தெரு, பல்லவர்மேடு, காமராஜர் வீதி, ரயில்வே சாலை, ஆனந்தாபேட்டை, திருக்காலிமேடு வழியாக நத்தப்பேட்டை ஏரியில் இணைகிறது.
மழைநீர் மட்டுமே செல்ல வேண்டிய இக்கால்வாயில் தற்போது, முறைகேடாக விடப்படும் வீட்டு உபயோக கழிவுநீர் செல்கிறது. இக்கால்வாயின் தடுப்புச்சுவர் சேதமடைந்து இருந்ததால், 40 கோடி ரூபாய் செலவில், புதிதாக பக்கவாட்டு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், நான்கு நாட்களுக்கு முன், திருக்காலிமேடு அருந்ததியர் நகர் அருகில் கால்வாய்யோரம் இருந்த 'குல்மோகர்' மரம் முறிந்து, கால்வாயில் சாய்ந்து விழுந்தது.
கால்வாயில் நீர்வழித் தடத்தில் விழுந்த மரத்தை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
தற்போது கழிவுநீர் மட்டும் செல்லும் நிலையில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பலத்த மழை பெய்தால், கால்வாய் மூலம் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, மஞ்சள் நீர் கால்வாயில் மழைநீர் செல்வதற்கு இடையூறாக விழுந்துள்ள, 'குல்மோகர்' மரத்தை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.