/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலவாக்கத்தில் கிழிந்து தொங்கும் பேனரை அகற்ற வலியுறுத்தல்
/
சாலவாக்கத்தில் கிழிந்து தொங்கும் பேனரை அகற்ற வலியுறுத்தல்
சாலவாக்கத்தில் கிழிந்து தொங்கும் பேனரை அகற்ற வலியுறுத்தல்
சாலவாக்கத்தில் கிழிந்து தொங்கும் பேனரை அகற்ற வலியுறுத்தல்
ADDED : ஜூலை 07, 2025 12:58 AM

உத்திரமேரூர்:-சாலவாக்கம் பேருந்து நிலையத்தில் கிழிந்து தொங்கும் பேனரை அகற்ற, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
இங்கு, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளும் வந்து செல்கின்றன.
இந்த பேருந்து நிலையத்தில் உள்ளேயும் வெளியேயும் சமீப நாட்களாக, அரசியல் கட்சியினர் பல்வேறு பேனர்களை வைத்து வருகின்றனர்.
இந்த பேனர்கள் அவ்வப்போது காற்றின் வேகத்தால் கிழிந்து தொங்கி வருகின்றன. இந்நிலையில், பேருந்து நிலையத்தையொட்டி உள்ள சாலையில் தினமும், 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் வந்து செல்கின்றன.
அப்போது, கிழிந்து தொங்கும் பேனர், வாகன ஓட்டிகள் மீது விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பொது இடங்களில் பேனர் வைப்பது குறித்து, நீதிமன்றம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் காற்றில் பறக்க விடப்பட்டு வருகின்றன.
எனவே, சாலவாக்கத்தில் கிழிந்து தொங்கும் பேனரை அகற்ற, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

