/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமான மழைநீர் வடிகால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
/
சேதமான மழைநீர் வடிகால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : மே 30, 2025 10:36 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் நான்கு மாட வீதிகளிலும், கடந்த 2014ம் ஆண்டு, பாரம்பரிய நகர வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டு அதன் மீது நடைபாதை அமைக்கப்பட்டது.
கட்டுமானப் பணி முறையாக நடைபெறாததால், பணி முடிந்த ஒரு ஆண்டிலேயே நடைபாதையோரம் அமைக்கப்பட்ட தடுப்புச்சுவர் கற்கள் சரிந்து விழுந்தன. முறையான பராமரிப்பு இல்லாததால், நடைபாதையில், செடிகள் வளர்ந்துள்ளன.
இந்நிலையில், கிழக்கு மாட வீதியில், மழைநீர் வடிகால்வாயின் ஒரு பகுதி சிதிலமடைந்து உடைந்த நிலையில் உள்ளது.
இதனால், மழைக்காலத்தில் கால்வாய் வாயிலாக மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, ஏகாம்பரநாதர் கோவில் கிழக்கு மாடவீதிளில் சேதமடைந்த நிலையில் மழைநீர் வடிகால்வாயை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினரிடையே கோரிக்கை எழுந்துள்ளது.