/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஜல்லி பெயர்ந்த சாலை சீரமைக்க வலியுறுத்தல்
/
ஜல்லி பெயர்ந்த சாலை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : நவ 28, 2025 04:17 AM

புத்தேரி: ஜல்லி கற்கள் பெயர்ந்து, சேதமடைந்த நிலையில் உள்ள புத்தேரி ஊராட்சி, பெரிய மேட்டுத் தெரு பிரதான சாலையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரி ஊராட்சி, சாலபோகம் சாலையில் இருந்து பெரிய மேட்டுத் தெருவில், 600க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதிக்கு செல்லும் பிரதான சாலையில், ஜல்லி கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பஞ்சர் ஆகின்றன.
மழைக்காலங்களில் சாலையில் தேங்கும் மழைநீரில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ள பெரிய மேட்டுத் தெருவிற்கு புதிதாக தார்சாலை அமைக்க, காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

