/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பல்லாங்குழியான பென்னலுார் சாலை சீரமைக்க வலியுறுத்தல்
/
பல்லாங்குழியான பென்னலுார் சாலை சீரமைக்க வலியுறுத்தல்
பல்லாங்குழியான பென்னலுார் சாலை சீரமைக்க வலியுறுத்தல்
பல்லாங்குழியான பென்னலுார் சாலை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஏப் 11, 2025 01:22 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட பென்னலுார் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்கள் அடிப்படை தேவைக்காகவும், பள்ளி, கல்லுாரி மற்றும் வேலைக்கு செல்லவும், பென்னலுார் பிரதான சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஸ்ரீபெரும்புதுார் -- குன்றத்துார் சாலைகளை இணைக்கும் பென்னலுார் பிரதான சாலையில், நாள்தோறும் ஏராளமான கார் பைக், பள்ளி மற்றும் கல்லுாரி பேருந்துகள் சென்று வருகின்றன.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலை, சில ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், பல்லாங்குழியான சாலையில் செல்லும் போது, நிலைத்தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். பெண்கள், வயதானோர் சிரமமடைந்து வருகின்றனர்.
எனவே, குண்டும் குழியுமாக மாறியுள்ள பென்னலுார் சாலையை சீரமைக்க, ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.

